இருசக்கர வாகனத்தின் மீது மினி லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள கரும்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று தனது நண்பரான மதியழகன் என்பருடன் இருசக்கர வாகனத்தில் கரும்பூர் ரோட்டில் சென்று கொண்டிருந்த சமயத்தில் எதிரே வந்த மினி லாரி ரவிச்சந்திரன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளனர்.
இதில் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரவிச்சந்திரனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மதியழகனை அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.