Categories
மதுரை மாநில செய்திகள்

மதுரை ரயில் நிலையத்தில் போதை பொருள் கடத்தல்… திடீர் சோதனையால் பயணிகள் பீதி..!!

தமிழக தென் மாவட்டங்களில் போதை பொருள் கடத்தப்படுவதாக வெளியான தகவலை அடுத்து மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

மும்பையில் இருந்து தமிழகத்தின் தென் மாவட்டத்தில் உள்ள பகுதிகளுக்கு சட்ட விரோதமாக  போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து மதுரை ரயில் நிலையத்தில் திடீரென ரயில்வே துறை காவலர்கள் மோப்ப நாயின்  உதவியுடன் மதுரை இரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர்.இச்சோதனையானது மதுரை ரயில் நிலைய காவல் ஆய்வாளர் முகேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.

Image result for ரயில்வே நிலையத்தில் சோதனை

இதில்  சுமார் 20க்கும் மேற்பட்ட ரயில்வே துறை காவலர்கள்  மற்றும் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள்  சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி காலை 7 மணி முதல் மதுரை ரயில் நிலையத்திற்கு வந்த அனைத்து ரயில்கள் மற்றும் பயணிகளின் உடமைகளை காவல்  சோதனையிட்டனர். திடீரென நடத்தப்பட்ட சோதனையானது ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகள்  மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

Categories

Tech |