நடிகை வரலட்சுமி செய்தியாளர்களிடம் இனி இப்படி கேவலமான கேள்வி கேட்காதீர்கள் என்று கோபமாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் போடா போடி, மாரி 2, சர்க்கார் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் இவர் தன் பிறந்த நாளை கொண்டாடினார்.
அங்கு குழந்தைகளுக்கு பொம்மை, சாக்லேட், கேக் போன்றவற்றை வாங்கிக் கொடுத்த அவர் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேள்வி கேட்டுள்ளார். அந்தக் கேள்வியைக் கேட்டு திடீரென கோபமடைந்த வரலட்சுமி இப்படிப்பட்ட கேவலமான கேள்வியை யாரிடமும் கேட்காதீர்கள் என்று கோபமாக பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், திருமணம் என்பது பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றா? ஆண்களுக்கு மட்டும் தான் கொள்கைகள் இருக்க வேண்டுமா? பெண்களுக்கு கொள்கைகள் இருக்கக் கூடாதா? என்று தொடர்ந்து கேள்வி எழுப்பிவிட்டு இனி யாரிடமும் கல்யாணம் எப்போது என்ற கேவலமான கேள்வியை கேட்காதீர்கள் என்று கூறியுள்ளார்.