சுசுகியின் அக்சஸ் 125 எஸ்.இ. அறிமுகம்
இந்தியாவில் சுசுகி மோட்டார் நிறுவனம் புதிய ACCESS 125 S.E. ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. புதிய ACCESS 125 S.E இல் பல்வேறு மாற்றங்களும் புதியஅம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் கருப்பு நிறம் கொண்ட அலாய் இரு சக்கர வீல்கள் , பெய்க் கலரிலான லெதர் சீட்கள், வட்ட வடிவம் கொண்ட க்ரோம் கண்ணாடிகள், மொபைல் சார்ஜ் வசதி, நீலமான சீட், ஸ்பீடோமீட்டர் உட்பட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. மேலும் இதில் சிங்கிள் ஏர்-கூல்டு சிலிண்டர் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த இயந்திரமானது 8.7 B .H.B., 7000 R.B.M., அதுமட்டுமல்லாமல் 10.2 N.M.DARK, 5000 R.B.M., செயல்திறன்களை கொண்டுள்ளது. புதிய ஸ்கூட்டரான ACCESS 125 S.E யில் செல்ப் ஸ்டார்ட், செக்யூரிட்டி சிஸ்டங்கள்,தொழிநுட்பங்கள் போன்றவைகள் அமைக்கப்பட்டுள்ளது.அது மட்டுமல்லாமல் பல்வேறு வண்ணங்களில் இந்த புதிய பைக்கானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலையானது சுமார் ரூ. 61,788 நிர்ணயித்துள்ளது. புதியதாக DISC-BREAK ஸ்டாண்டர்டு DISC வேரியண்டின் மாடல்களை தவிர்த்து விலை ரூ. 1,600 அதிகரித்துள்ளது.