Categories
உலக செய்திகள்

பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்… வசமாக சிக்கிய மனநல ஆலோசகர்… கொடூரம்…!!!

கோவா வந்த பிரெஞ்ச் பெண்ணுக்கு மன நல ஆலோசகர் போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த மனநல ஆலோசகர் கடந்த ஜனவரி மாதம் தன் குடும்பத்துடன் கோவாவிற்கு குடிபெயர்ந்துள்ளார். கோவா ஒரு மிகப்பெரிய சுற்றுலா தளம் என்பதால் சுற்றுலா பயணிகள்  அங்கு பெருமளவில் வருவது உண்டு. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து கோவாவிற்கு வரும் பல்வேறு பயணிகளுக்கு மனநல ஆலோசனையும் மருத்துவ சிகிச்சைகளையும் வழங்கி வந்துள்ளார்.அப்பொழுது  பிரான்சில்  உள்ள பாரிசை சேர்ந்த பெண்ணொருவர் யோகா ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அந்த யோகா ஆசிரியர் கோவாவிற்கு சுற்றுலா பயணம்  மேற்கொண்டுள்ளார்.

மேலும் கோவாவில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் சென்று சுற்றிப் பார்த்துள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென முதுகு வலி ஏற்பட்டுள்ளது .அதனால் அங்கு உள்ள மனநல ஆலோசகரும் மற்றும் மருத்துவ சிகிச்சை முறைகளை அளிக்கும் நபரை சந்தித்து சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணின் அழகில் மயங்கிய மனநல ஆலோசகர் அந்த இளம் பெண்ணிற்கு உடனடியாக முதுகுவலி குணமாகும் என்று கூறி  ஒரு மருந்தை கொடுத்து அதை இப்பொழுதே அருந்துமாறு கூறியுள்ளார்.

அந்த யோகா ஆசிரியரும் அவர் கூறியபடியே மருந்தை குடித்தார் அதன்பிறகு சில நிமிடத்திலேயே மயக்கம் ஆனார்.அந்தப் பெண் கிட்டத்தட்ட சுமார் 6 மணி நேரம் மயக்கத்திலேயே இருந்த நிலையில் மாலை 6 மணி அளவில் மயக்கத்திலிருந்து விழித்தவுடன் அவர் மீது ஆடைகள் விலகி இருந்ததும் உடம்பில் வலி ஏற்பட்டதை வைத்து தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளோம்  என்பதை உணர்ந்து அந்த மனநல ஆலோசகரிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்து பதிவு வழக்கு செய்தார்.

இது குறித்து போலீசார் அந்த மனநல ஆலோசகரை தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். கோவாவிற்கு வந்த பிரான்ஸ்  நாட்டு பெண்ணிடம்  இந்திய மனநல ஆலோசகர் இவ்வாறு தரைகுறைவாக நடந்து கொண்டது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |