தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. எதிர்க்கட்சியினரும், ஆளும் கட்சியினரும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஸ்டாலின் தான் கூறும் அறிக்கைகளை முதல்வர் கேட்டு மறுநாளே அறிவித்து விடுகிறார் என்று கூறி வந்தார். இந்நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதியில் பேசிய மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன், ஸ்டாலின் ஊழலுக்கு ஒத்துப் போவதாகவும், தான் ஒரு நோட்டை அவரிடம் கொடுக்கிறேன் அதில் என்ன சொல்ல வேண்டும் என்று எழுதி கொடுக்கிறேன். அதை ஸ்டாலின் பிழையில்லாமல் வாசித்தால் போதும்.
அது என்னவென்றால் மணல் திருடுவதை நிறுத்த சொல்லுங்கள், டாஸ்மாக் கடைகளை பாதியாவது மூட சொல்லுங்கள், இ-டெண்டரில் மாமன் மச்சான் என்று சொல்லி கள்ளத்தனம் செய்து ஒப்பந்தம் போடுகிறார்களே அதை நிறுத்தச் சொல்லுங்கள் பார்ப்போம் என்று கூறியுள்ளார். மற்றவற்றை எல்லாம் சொல்லும் நீங்கள் இதை ஏன் சொல்ல மாட்டீர்கள்? ஏனென்றால் இதை முதல்வர் தடுத்து நிறுத்தி விட்டால் நம்முடைய ஆட்சிக்கு வரும்போது அதை செய்ய முடியாது என்று நினைப்பீர்கள் என்று கமல் விமர்சித்து பேசியுள்ளார்.