மெக்சிகோவில் கணவனை விட்டு கள்ளக்காதலுடன் உல்லாச பயணம் செய்த மனைவியை கார் விபத்து ஏற்படுத்தி காட்டி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
மெக்சிகோவில் சால்டில்லோ என்ற பகுதியில் வேகமாக சென்ற கார் தனது கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அப்போது விபத்து நடந்த இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். பெண்ணொருவர் தனியாக சாலையோரம் அமர்ந்து இருந்ததை பார்த்த போலீசார் விபத்துக்குள்ளான காரை ஓட்டியது அந்தப்பெண் தெரியவந்தது. அதன்பிறகு பெண்ணின் உடம்பில் ஏதாவது காயம் ஏற்பட்டு உள்ளதா என்று விசாரித்தனர் ஆனால் இந்த பெண் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். பெண்ணுக்கு முதல் உதவி செய்துவிட்டு போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்தப் பெண்ணின் பெயர் எட்னா என்றும் அந்தப் பெண்ணே காரை ஓட்டி வந்ததாகவும் கூறினார். அந்தக் காரில் பெண்ணின் காதலன் ரவுல் இருப்பதை போலீஸ் கண்டறிந்தார் . போலிஸிடமிருந்து காதலனை காப்பாற்றுவதற்காக என்னால் தான் கார் விபத்திற்கு உள்ளானது என்று பொய் உரைத்தார். போலீசார் விபத்தில் சிக்கிய பெண்ணை வீட்டிற்கு அனுப்பி வைப்பதற்காக செல்போன் மூலம் பெண்ணின் வீட்டிலுள்ளவர்களை தொடர்பு கொண்டார். அப்பொழுது வீட்டிலிருந்து எட்னாவை அழைத்துப் போவதற்காக அவள் கணவர் வந்துள்ளார்.
மேலும் தன் கணவரை ஏமாற்றி துரோகம் செய்து விட்டு காதலனுடன் காரில் சுற்றி திரிந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இன்னொருவரின் மனைவியுடன் காரில் சுற்றி விபத்தை ஏற்படுத்தியதற்காக காதலனை போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு போலீசார் இளம்பெண் எட்னாவை தனது கணவருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட கார் விபத்தினால் கணவரை ஏமாற்றிய மனைவி தன் காதலனுடன் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சிபடுத்தியுள்ளது.