இனி மனைவி வீட்டு வேலை அனைத்தையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஒரு கணவன் மனைவி டீ போட்டு கொடுக்காததால் சுத்தியலால் அடித்து கொலை செய்து பின்னர் தடயங்களை அழித்து விட்டு கொட்டிய ரத்தத்தை சுத்தம் செய்து, மனைவியை குளிப்பாட்டி நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனைவி என்பவள் உங்களின் தனிப்பட்ட உடமையோ அல்லது ஒரு பொருளோ கிடையாது. அவர்களும் உங்களைப் போல ஒரு உயிர்தான். சமத்துவம் என்ற அடிப்படையில் கணவன் மனைவியாக ஒரு உறவுக்குள் நுழைகின்றனர். ஆனால் அது சரியாக கடைபிடிக்க படுகிறதா? என்றால் அது இல்லை.
ஆண்-பெண் பணியில் ஏற்றத்தாழ்வு வருவதால்தான் மனைவி அனைத்து வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டும் என்று கணவர் எதிர்பார்க்கின்றனர். இது மிகவும் தவறான செயல். அவ்வாறு மனைவி தான் வேலை பார்க்க வேண்டும் என்று அனைத்து கணவன்மார்களும் எதிர்பார்க்கக்கூடாது. பாலின ஏற்றத்தாழ்வுகள் உடன் அடிபணிய வேண்டும் என்ற நோக்கமும் எதிர்பார்க்கக்கூடாது. இதன் காரணமாக திருமண உறவில் கணவர்கள் தாங்கள்தான் முதன்மையானவர்கள் என்று கருதி தங்கள் மனைவியை விருப்பத்திற்கு ஆட்டி வைக்கின்றனர் .
அவர்களை அடித்து துன்புறுத்துவது, வேலை செய்யவில்லை என்றால் கொடுமை செய்வது என்ற பல சம்பவங்கள் தற்போது நிகழ்ந்து வருகின்றது. பெண்கள் நம் நாட்டில் பல துறைகளில் முன்னேறி வந்தாலும், இந்த திருமணம் என்ற பந்தத்தில் ஆண் பெண்ணை தனக்கு அடிமையாகவே நடத்தும் சம்பிரதாயம் இன்னும் பல இடங்களில் நடந்துதான் வருகிறது. எனவே இனி அனைத்து மனைவிகளும் தங்கள் வீட்டில் கட்டாயம் வேலை செய்யவேண்டும் என்று கணவன்மார்கள் எதிர்பார்க்க கூடாது என உயர் நீதிமன்றம் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் அவரின் ஆறு வயது மகள் சாட்சி சொல்லியதை அடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.