சீனாவில் உருவான கொரோனா வைரஸ் ஆனது உலகம் முழுவதும் பரவியதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.இந்நிலையில் உருமாறிய கொரோனா, கொரோனா இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது.
மேலும் மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தற்போது கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது. இதனால் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோன அதிகரித்து வருவதன் காரணமாக மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.