கனடாவில் ரொறன்ரோ மருத்துவ கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் உட்பட 23 பேர் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்றனர் என்று இழப்பீடு கேட்டு குழந்தைகள் நல மருத்துவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கனடாவில் உள்ள ரொறன்ரோ பகுதியில் குல்விந்தர் கவுர் கில் என்பவர் குழந்தைகள் நல மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் சமீபத்தில், கனட குடிமக்களுக்கு கொரோனா வராமல் தடுப்பதற்கு தடுப்பூசியோ, ஊரடங்கோ தேவை இல்லை என்று கூறியிருந்தார். மேலும் அவர்கள் கொரோனாவை எதிர்கொள்வதற்கு மலேரியாவிற்கு செலுத்தும் தடுப்புமருந்தே போதும் என்று கூறியிருந்தார்.
இந்த கருத்திற்கு குல்விந்தர் உடன் பணியாற்றும் சக மருத்துவர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர் கூறிய கருத்து டிவிட்டரில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டது. மேலும் ஒழுங்குமுறை ஆணையத்தில் குல்விந்தர் மீது புகார் அளிக்கப்பட்டது. தற்போது அந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அது என்னவென்றால் குல்விந்தர் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் ரொறன்ரோ மருத்துவ கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் உட்பட 23 பேர் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதோடு, எனது தொழிலையும் கெடுத்து வருகின்றனர்.
எனவே அவர்கள், எனக்கு 6.8 மில்லியன் டாலர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் அவரது புகாரில், என்னை உறுதியான மன நலம் இல்லாத பெண் என்று கூறுவதோடு மட்டுமல்லாமல் என் எதிர்காலத்தையே அழித்துவிடுவேன் என்று அச்சுறுத்துவதாக அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், அவர் என்னதான் வழக்கு தொடர்ந்து இருந்தாலும் எங்களிடமிருந்து ஒரு ரூபாய் கூட இழப்பீடாக வாங்க மாட்டார் என்று எதிர் தரப்பினர் கருத்து கூறி வருகின்றனர்.