Categories
தேசிய செய்திகள்

அரசு பள்ளியில் நுழைந்த கொரோனா…. 7 பேருக்கு தொற்று உறுதி…. பெரும் அதிர்ச்சி…!!

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பெற்றோர்களின் கருத்து கேட்பிற்கு பின்னர் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோன விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகளில் வகுப்பு நடத்தப் பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரின் கே.ஆர் புரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள மாணவர்களில் பத்தாம் வகுப்பு படிக்கும் 7 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் அவர்கள் அனைவருமே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதில் ஒரு ஆசிரியர் மருத்துவமனையிலும் மற்ற இருவர் வீட்டிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், “ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கொரோன பரிசோதனைக்கு உட்படுத்தியபோது நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அடுத்த ஏழு நாட்களுக்கு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |