Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! தீமை நீங்கும்..! நெருக்கம் உண்டாகும்

தனுசு ராசி அன்பர்களே…!
இன்று உங்களிடம் இருக்கும் முயற்சிகளால் வெற்றி வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும்.

உங்களுக்கு அலுவலகத்தில் நல்ல பெயர்கள் கிடைக்கும். இன்று உங்களுக்கு மன நிம்மதி பெறும் நாளாக தான் இருக்கும்.
இன்று உங்கள் வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சனைகள் உங்களுக்கு சாதகமாகவே இன்று நடந்து முடியும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் புரிந்து செயல் படுவது நல்லது. பிள்ளைகளின் விஷயத்தில் பிள்ளைகளை கொஞ்சம் விட்டு படியுங்கள். அவர்கள் எவ்வாறு படிக்கிறார்கள் என்று அவ்வப்பொழுது கண்காணியுங்கள். நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்காக எதிர்காலம் பற்றி சிந்தித்து செயல்படுவீர்கள். பயண பொழுதில் கவனம் தேவை. நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் யோசித்து கையாள வேண்டும். பயணத்தின் பொழுது நீங்கள் உங்களின் பொருட்களை கவனமாக வைத்திருக்க வேண்டும். இன்று உங்களுக்கு கடுமையான பணிச்சுமை இருக்கும். வீட்டிலும் அதிகப்படியான வேலைகள் இருக்கும் பெண்கள் சமைக்கும் பொழுது கவனம் தேவை.
புதிய ஒப்பந்தங்களை படித்துப் பார்த்த பின்னே கையெப்பம் போடுவது மிகவும் சிறந்தது. நீங்கள் கேட்ட இடத்தில் கடன் கிடைப்பதற்கு கொஞ்சம் காலதாமதம் ஏற்படும். தொழிலதிபர்கள் மற்றும் பங்குதாரர்களிடம் உங்களுக்கு எச்சரிக்கை தேவை. இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் பங்குதாரர்களிடம் எந்த ஒரு கணக்கு வழக்கையும் பார்க்க வேண்டாம். கணவன் மனைவி இருவரும் எந்த ஒரு விஷயத்தையும் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். இருவரும் விட்டுக் கொடுத்து செல்வதே சிறந்தது. காதலில் உள்ளவர்களும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் சிறந்தது. தேவையில்லாத பழைய பிரச்சினைகளை பேசி சிக்கல்களை பெரிது படுத்தாமல் இருப்பது நல்லது.
மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும் கொஞ்சம் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். விடுமுறை நாட்களாக இருந்தாலும் நீங்கள் கடின முயற்சி செய்வீர்கள். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது.
நீங்கள் இன்று சூரிய பகவான் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம் இளம் சிவப்பு மற்றும் நீலம் நிறம்.

Categories

Tech |