Categories
உலக செய்திகள்

“விண்வெளித்துறையில் சாதித்த ஸ்வாதி மோகன்”… சாதிப்பதற்கான ஆசை இப்படி தான் வந்தது… அவரே கூறிய தகவல்…!!

விண்வெளித்துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை எப்படி தோன்றியது என்று ஸ்வாதி மோகன் கூறியுள்ளார்.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக பெர்சிவரன்ஸ் ரோவர் என்ற விண்கலம் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவில் இருந்து அனுப்பப்பட்டது. தற்போது அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் வெற்றிகரமாக களமிறங்கியதாக செய்தி வெளியானது. இந்த சாதனையானது நாசாவின் மிக முக்கிய சாதனைகள் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது.

அந்த பெர்சிவரன்ஸ் ரோவர் என்ற விண்கலம் செவ்வாய் கிரகத்தில் அனுப்பும் குழுவிற்கு தலைமை வகித்தவர் ஸ்வாதி மோகன்.  இந்நிலையில் ஸ்வாதி மோகனுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீடியோ காலில் பேசினார்.  அந்த உரையாடலில் பைடன் ஸ்வாதி மோகனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது ஸ்வாதி மோகன் கூறியதாவது , “நான் சிறு வயதிலேயே என் தாய் தந்தையுடன் அமெரிக்காவிற்கு வந்துவிட்டேன்.

நான் குழந்தையாக இருந்தபோது ஸ்டார் ட்ரக் என்ற பிரபல தொலைக்காட்சி தொடர் ஒளிபரப்பப்பட்டது. அது எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த நிகழ்ச்சியில் நம் சிந்தனைக்கு அப்பாற்பட்ட  விண்வெளி அறிவியல் குறித்து விளக்கப்படும். அந்த நிகழ்ச்சியை பார்த்த பிறகுதான் விண்வெளித்துறையில் கண்டிப்பாக சாதிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் தோன்றியது” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |