முகத்தை மூடி மூதாட்டி உறங்கியதால் கஞ்சா போதையில் வந்த வாலிபர் இளம்பெண் என்று நினைத்து நாசம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவர் பிரம்மச்சாரியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் தனியாக வசித்து வந்த இவருடைய வீட்டில் சம்பவத்தன்று மூதாட்டி தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பிரேத பரிசோதனையில் மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த பகுதியை சேர்ந்த வசந்த் குமார் என்பவரை கைது செய்துள்ளனர். அப்போது, வசந்தகுமார் தான் கஞ்சா போதையில் சென்றபோது மூதாட்டியின் வீடு திறந்து கிடந்துள்ளது. அப்போது முகத்தை மூடிக்கொண்டு அந்த மூதாட்டி உறங்கிக்கொண்டிருந்ததால் வயதானவர் என்று அறியாமல் அவரை நாசம் செய்துள்ளார். போதை தெளிந்த பிறகு தான் கற்பழித்தது ஒரு மூதாட்டி என்று தெரிந்ததால் வெளியே தெரியாமல் இருக்க அவரை தரையில் அடித்து கொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் கிடந்த செயினை பறித்துவிட்டு சென்றதாக ஒப்புக்கொண்டுள்ளார். இளம்பெண் என்று நினைத்து கிழவியை நாசம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.