Categories
உலக செய்திகள்

“அடப்பாவிகளா..!” நள்ளிரவில் பேய் வேட்டையா..? 60 மைல் கடந்து வந்தவர்கள்.. போலீசிடம் சிக்கிய வேடிக்கை சம்பவம்..!!

பிரிட்டனில் நள்ளிரவில் பேய் வேட்டைக்காக வந்த 4 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

பிரிட்டனில் மார்ச் 5ஆம் தேதியன்று நள்ளிரவில் “Team 3 Town Hill” என்ற காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் நான்கு பேர் இருந்துள்ளனர். இதனை கவனித்த காவல்துறையினர் அவர்களை விசாரித்துள்ளனர். அப்போது நாங்கள் “Ghost Hunters” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

https://twitter.com/SWPSwansea/status/1367656104906420231

மேலும் Cwmbran என்ற நகரத்தில் இருந்து 60 மைல் தூரத்தில் பயணம் செய்து பேய்கள் வேட்டைக்கு புகழ்பெற்ற Swasnea Castle என்ற பகுதிக்கு வந்திருக்கிறோம் என்று கூறியுள்ளனர். அதாவது கடந்த டிசம்பர் 20-ம் தேதியில் இருந்து வேல்ஸ் பகுதியில் நான்காம் நிலை ஊரடங்கிற்கான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக அவர்களின் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசியமான பயணங்கள் மட்டுமே மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கொரோனா கட்டுப்பாட்டை மீறி பயணித்ததாக அந்த 4 நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் கார் ஓட்டுநரும் இன்சூரன்ஸ் வைத்திருக்கவில்லை. தற்காலிகமான ஓட்டுநர் உரிமம் மட்டுமே வைத்திருந்துள்ளார். எனவே காவல்துறையினர் உடனடியாக காரை பறிமுதல் செய்தனர். அதன் பிறகு நால்வரையும் திருப்பி அனுப்பிவிட்டனர். இச்சம்பவத்தை Swasnea  பகுதி காவல்துறையினர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

Categories

Tech |