கொரோனா வைரஸ் அதிவேகமாக தன்னை உருமாற்றிக் கொண்டு பரவி வருவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் பல இடங்களில் இதன் தாக்கம் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த சிலருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதன் மாதிரியை எடுத்து பெங்களூரில் உள்ள ஐஐஎஸ்சி விஞ்ஞானிகள் அந்த மாதிரிகளைக் கொண்டு ஆய்வை மேற்கொண்டனர். அப்போது வைரஸில் 27 உருமாற்றங்கள் காணப்படுவதாக தெரிய வந்தது.
மேலும் ஒரு மாதிரியில் 11க்கும் அதிகமான முறை கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது முன்பை விட படு வேகமாக மாறி வருகிறது. இது சிக்கலை ஏற்படுத்தக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஐஐஎஸ்சி நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் பெங்களூருவில் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து மூக்கு வழியாக வெளியேறிய மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொண்டனர்.
இந்த ஆய்வு முடிவுகளை மத்திய சுகாதார அமைச்சகம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்ப எதிர்கால திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் தற்போது தடுப்பூசியை விரைவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.