மேடையில் பள்ளி மாணவி கேட்ட கேள்விக்கு நடிகர் விஜய் சிரித்துக்கொண்டே பதிலளித்த பழைய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது .
This man on stage then and now 😌
Then #Master @actorvijay with students 😃
His engaging smile ❤️#Revisiting_VintageVijay pic.twitter.com/3WUPawZ6MR— Deepa ♡ (@Deepa_vj) March 5, 2021
இதைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார் . விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது . இந்நிலையில் நடிகர் விஜய் பள்ளி விழாவில் கலந்து கொண்ட பழைய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஒரு பள்ளி மாணவி விஜய்யிடம் அவரது குடும்பத்தைப் பற்றி கேட்க வெட்கப்பட்டு சிரித்தபடி பதிலளிக்கிறார் தளபதி . தற்போது இந்த வீடியோ விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.