ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 18 விதமான சேவைகளை ஆன்லைன் மூலமே பெறலாம் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஓட்டுநர் உரிமம் பெற எல்எல்ஆர் பதிவு, வாகனப் பதிவு மற்றும் ஆதார் மூலமாக ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல், மாற்று வாகன பதிவு சான்றிதழ் உள்ளிட்ட 18 விதமான சேவைகளை ஆன்லைன் மூலமே பெறலாம் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஆர்டிஓ அலுவலகங்களுக்கு வரும் மக்கள் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆன்லைன் மூலமாக பெறக்கூடிய ஆர்டிஓ சேவைகள் என்ன என்பது பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம் என்பது.
- பழகுநர் உரிமம்.
- ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் (வாகனத்தை இயக்கி காட்டுதல் தேவையில்லை)
- டூப்ளிகேட் டிரைவிங் லைசென்ஸ்
- ஓட்டுனர் உரிமம், ஆர்சி புக் முகவரி மாற்றுதல்
- சர்வதேச அளவில் ஓட்டுனர் உரிமத்திற்கு அனுமதி
- வாகன உரிமத்தை ஒப்படைத்தல்
- வாகனத்துக்கு தற்காலிக பதிவு எண் பெற விண்ணப்பித்தல்
- முழுமையாக கட்டமைக்கப்பட்ட வாகனத்துக்கு பதிவு எண் பெற விண்ணப்பித்தல்
- வாகனத்துக்கு டூப்ளிகேட் பதிவு எண் பெற விண்ணப்பித்தல்
- என்ஓசி சான்றிதழ் பெற விண்ணப்பித்தல்.
- வாகனத்தின் உரிமையாளர் ஏமாற்றுவதற்கு விண்ணப்பித்தல்
- வாகன ஆர்சி புத்தகத்தில் முகவரியை மாற்ற விண்ணப்பித்தல்
- அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற விண்ணப்பம் பதிவு செய்தல்
- உயர் அதிகாரிகளுக்கு வாகனத்தை பயன்படுத்த பதிவு செய்ய விண்ணப்பித்தல்.
- வாகனத்தை வாடகைக்கு எடுப்பது தொடர்பான ஒப்பந்தத்தை பதிவு செய்தல்
- வாகனத்தின் உரிமத்தை மாற்றுவது குறித்து விண்ணப்பித்தல்
- தூதரக அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு புதிய வாகன பதிவு எண் பெற விண்ணப்பித்தல் ஆகிய சேவைகளை ஆன்லைன் மூலமாகவே செய்து கொள்ளலாம்.