காரில் இருக்கும் பொருட்களை திருடுவதற்கு சிறுவர்களுக்கு மர்மகும்பலை சேர்ந்தவர்கள் பயிற்சி அளிப்பதாக காவல்துறை அதிகாரி எச்சரித்துள்ளார்.
பிரிட்டனில் 2015 ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டிற்குள் 6 வயதே நிரம்பிய 39,635 சிறுவர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து Sir David Thompson என்ற காவல் துறை அதிகாரி கூறியதாவது, ” சில மர்மகும்பல், சிறுவர்களுக்கு விலை உயர்ந்த ஆடைகள், ஷூ மற்றும் பணம் ஆகியவற்றை தருவதாக முதலில் ஆசை காட்டுவார்கள்.
பின்னர் அந்த சிறுவர்களுக்கு சாலை மற்றும் தெரு ஓரம் நிறுத்தப்பட்டிருக்கும் கார்களில் இருந்து பொருட்களை திருடுவதற்கு பயிற்சி அளிப்பார்கள். 2015 – 2020 வரை 13 வயதிற்குட்பட்ட சுமார் ஆயிரதிற்கும் மேற்பட்ட சிறுவர்கள் காரில் இருந்து பொருட்களை திருடி உள்ளனர்.
மேலும் இந்த குற்றத்திற்காக அந்த சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரிட்டனிலேயே லண்டன் தான் கார் திருட்டு சம்பவத்தில் தலைமையிடமாக இருக்கிறது. இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் 7847 சிறுவர்கள். அவர்கள் அனைவருமே 11 முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் தான்” என்று கூறியுள்ளார்.