பிரிட்டனில் உள்ள South Wales ல் இடை காலத்தை சேர்ந்த ரகசிய சுரங்கப்பாதை ஒன்று மின்சார வல்லுநர்களால் கண்டறியப்பட்டுள்ளது.
பிரிட்டனில் Monmouthshire உள்ள Wyw Velley யில் மின்கம்பத்தை நடும் பணியை மேற்கொண்டனர். அப்போது குழி தோண்டும் பணியை மேற்கொண்டனர். அங்கு சுரங்கப்பாதை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இது இடைக்காலத்தில் அமைக்கப்பட்டதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
தற்போது அகழ்வாராய்ச்சி பணிகள் இச்சுரங்கப்பாதையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் முதற் கட்ட ஆராய்ச்சியில் சுமார் 4 அடி உயரம் கொண்ட இச்சுரங்கப்பாதை மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்று தெரிய வந்திருக்கிறது. மேலும் சுரங்கப்பாதையானது சுமார் 1000 வருடங்கள் பழமை வாய்ந்தது என்றும் கருதப்படுகிறது.
மேலும் 1700களில் உள்ள ordinance Survey எதிலும் சுரங்கப்பாதை வரைப்படம் காணப்படவில்லை. எனினும் உள்ளூரில் வசிக்கும் மக்கள் மற்றும் அதிகாரிகள் போன்ற யாருக்கும் இந்த சுரங்கப்பாதையின் அமைப்பு பற்றி எந்தவிதமான தகவலும் தெரியவில்லை. மேலும் இது தொடர்புடைய பதிவுகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.