தென்காசி மாவட்டதில், ஆலங்குளத்தில் பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
தென்காசி மாவட்டம், நெல்லை- தென்காசி நெடுஞ்சாலையில் உள்ள ஆலங்குளத்திற்கு அருகில் வட்டாலூர் விலக்கு பகுதி உள்ளது. இப்பகுதி வழியே பூலாங்குளத்திற்கு செல்வதற்கான பாதை உள்ளது. இப்பாதை வழியாக இன்று காலையில் அவ்வழியே சென்ற மக்கள் ,அந்தப் பகுதியில் உள்ள கொய்யா தோப்பில், சாக்குமூட்டையில் மனித உடல் இருப்பதை கண்டனர். இதனால் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர் .
இவர்களுடன் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான சுகுணா சிங் மற்றும் டி.எஸ்.பி பொன்னிவளவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தன. பின் அந்த மூட்டையை பிரித்து பார்த்தபோது ,அதில் ஒரு பெண் பலத்த காயத்துடன் இறந்துகிடந்தார். அந்தப் பெண்ணின் உடலில் லேசான காயங்களும், முகமானது கம்பால் அடிக்கப்பட்டு ,கல்லால் தாக்கப்பட்டு அடையாளம் தெரியாத நிலையில் முகம் சிதைந்து இருந்தது.இதன் காரணமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ,அந்த பெண் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் ? என்று விசாரித்து வருகின்றனர்.
இவரின் உடல் இருந்த இடத்தில் ஆட்டோவின் டயர் தடமானது பதிந்துள்ளது. இந்தப் பெண்ணை மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு ஆட்டோவில் வந்து இப்பெண்ணை வீசி இருக்கலாம், என்ற கோணத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. சம்பவ இடத்திற்கு தொலைவில் உள்ளே கல்குவாரி மற்றும் நெல்லை – தென்காசி நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள ஆலை ஆகிய இரு இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவை பயன்படுத்தி அவ்வழியே சென்ற ஆட்டோக்களை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.