Categories
தேசிய செய்திகள்

கட்டின தாலியின் ஈரம் கூட காயலையே…. இப்படி ஆயிருச்சே…. பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…!!

திருமணம் முடிந்து மாலையில் மணமகன் வீட்டிற்கு செல்ல இருந்த நேரத்தில் மணப்பெண் திடீரென உயிரிழந்துள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் சோனேபூர் என்ற பகுதியில் வசிப்பவர் ரோஸி சாகு. இவருக்கும் பிபிக்சன் என்று இளைஞருக்கும் உறவினர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதையடுத்து திருமணம் நல்ல நிலையில் முடிந்ததையடுத்து மாலையில் மறுவீடு செல்வதற்காக மணமகள் ரோஸியின் வீட்டில் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்துள்ளது. அப்போது தன்னுடைய அம்மாவை பிரிந்து செல்ல வேண்டும் என்பதால் அழுதுகொண்டிருந்த ரோஸி திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய உறவினர்கள் ரோஸியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் ரோஸி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்த விசாரணையில் சில மாதங்களுக்கு முன்பு ரோஸி தன்னுடைய தந்தை இறந்த காரணத்தினால் மிகுந்த மன அழுத்தத்தில் காணப்பட்டுள்ளார். இதையடுத்து தற்போது தன்னுடைய குடும்பத்தை பிரிந்து சென்று விடுகிறோம் என்று மேலும் மன அழுத்தத்திற்கு ஆளாகி உயிரிழந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

Categories

Tech |