புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் ராப்பூசல் என்ற பகுதியில் வசிப்பவர் உமா(20). இவர் திருச்சியில் உள்ள மகாத்மா கண் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு உறவினரான ஆனந்தராஜ் என்பவருடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து சம்பவத்தன்றும் உமா வழக்கம்போல மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென மருத்துவமனையில் இருந்து உமா மயக்கம் அடைந்து விட்டதாகவும் உடனேமருத்துவமனைக்கு வருமாறும் அழைத்துள்ளனர்.
இதனால் ஆனந்தராஜ் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் அதற்குள் உமா இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த உமாவின் உறவினர்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து எவ்வாறு மரணமடைந்தார்? என்றும் இதற்கு வேறு ஏதேனும் பிரச்சனையா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.