இந்தோனேசியாவில் 8 வயது சிறுவனை ராட்சத முதலை ஒன்று விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் டிமஸ் முல்கன் சபுத்ரா என்ற 8 வயது சிறுவன் தனது தந்தையுடன் அப்பகுதியிலுள்ள ஆற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளான். சிறுவன் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஆற்றிலிருந்து 26 அடி இராட்சத முதலை ஒன்று வெளியே வந்து சிறுவனை கவ்வியது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிமஸ் -ன் தந்தை தனது மகனை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த முதலையுடன் போராடியுள்ளார்.
ஆனால் அந்த முதலை தந்தையின் கண்முன்னே சிறுவனை நீருக்கடியில் இழுத்துச்சென்று விட்டது. இதுகுறித்து தகவலறிந்த கிராம மக்கள் சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட போது மறுநாள் காலையில் முதலை அகப்பட்டுள்ளது. பின்னர், முதலையின் வயிற்றை கீறி சிறுவனின் உடலை முதலையின் வயிற்றுக்குள்ளிருந்து எடுத்துள்ளனர். இதுகுறித்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் கிராம மக்கள் முதலையின் வயிற்றை கீறி வயிற்றுக்குள்ளிருந்து சிறுவனை வெளியே எடுக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.