Categories
தேசிய செய்திகள்

BREAKING: அமைச்சர்களின் ஆபாச வீடியோ… பரபரப்பு செய்தி… உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

பாஜக அமைச்சர்களின் ஆபாச வீடியோ தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.

கர்நாடகாவில் ரமேஷ் ஜார்கிஹோலி என்ற அமைச்சரின் படுக்கையறை ஆபாச வீடியோ ஒன்று வெளியானது. அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அது பொய்யான வீடியோ என்று அமைச்சர் விளக்கமளித்தார். இதனைத் தொடர்ந்து மேலும் ஆறு பாஜக அமைச்சர்கள் தங்களைப் பற்றிய வீடியோக்கள் எதையும் மீடியாக்கள் வெளியிடக்கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோரி சிவராம், ஹெபார், பிசி பட்டில், ஹெச்.டி. சோம் சேகர், கே.சுதாகர், நாராயணன் கவுடா, பியாரதி பசவராஜ் ஆகிய 6 அமைச்சர்களும் நீதிமன்றத்தில் அவசர வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அம்மாநில உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அந்த வழக்கில், அமைச்சர்களின் ஆபாச வீடியோக்கள் தொடர்பான சிடி, கருத்துக்களை வெளியிட 68 ஊடகங்களுக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணை 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |