Categories
தேசிய செய்திகள்

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க திட்டம்… மத்திய அரசு அறிவிப்பு…!!!

பொதுத்துறையில் உள்ள 13 வங்கிகளை 5 வங்கிகளாக இணைப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் வாராக் கடன் நிலுவை தொகை அதிகரித்து வருவதால் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க முடிவு செய்திருப்பதாக நடப்பு ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார். அதன் மூலம் பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்குகள் தனியாரிடம் விற்கப்பட்ட அதன் மூலம் நிலுவை தொகையை ஈடுகட்ட அரசு முடிவு செய்துள்ளது. அதன் முதல் கட்டமாக 4 பொதுத்துறை வங்கிகளில் பங்கு விலைகள் மேற்கொள்ள அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படி பொதுத்துறையில் உள்ள 13 வங்கிகளை 5 வங்கிகளாக இணைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.மத்திய பட்ஜெட்டில் பொதுத்துறையை சேர்ந்த இரண்டு வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பேங்க் ஆப் மகாராஷ்டிரா, பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆகியவற்றை தனியார்மயமாக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |