Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இந்த பகுதிக்கு நாளை மறுநாள் மின் விநியோகம் கிடையாது… மின் பகிர்மான செயற்பொறியாளர் தகவல்..!!

சிவகங்கையில் உள்ள சிங்கம்புணரி பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக வருகின்ற 8-ம் தேதி மின் விநியோகம் செய்யப்பட உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் கோட்டம் அருகே சிங்கம்புணரி துணை மின் நிலையம் உள்ளது. அந்த மின் நிலையத்தில் வருகின்ற 8-ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் சிங்கம்புணரி பகுதிக்குட்பட்ட காளாப்பூர், எஸ்.வி.மங்கலம், பிரான்மலை ஆகிய ஊர்களில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

மேலும் அதனை சுற்றி உள்ள கிராமங்களிலும் மின்சார விநியோகம் தடை செய்யப்பட உள்ளது. இந்த மின் வினியோக தடையானது வருகின்ற 8-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செய்யப்பட உள்ளது. இந்த மின் விநியோக தடை குறித்து திருப்பத்தூர் பகுதியில் உள்ள மின் பகிர்மான கோட்ட செயற்பொறியாளர் வெங்கட்ராமன் தகவல் அளித்துள்ளார்.

Categories

Tech |