Categories
லைப் ஸ்டைல்

சொன்னா கேளுங்கப்பா… நைட்ல தயிர் சாப்பிடாதீங்க பிளீஸ்…!!

இரவில் தயிர் சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்று இப்போது பார்க்கலாம்.

பழங்காலத்திலிருந்தே தயிரானது ஜீரண மற்றும் அமில எதிர்விளைவுகளிலிருந்து நிவாரணம் தரும் ஒரு நல்ல பயனுள்ள பொருளாக நம்பப்பட்டு வருகிறது. ஒரு டம்ளர் தயிரை தினமும் உண்ணும் போது நம் உடலுக்கு தேவையான வைட்டமின் டி ஊட்டச்சத்துகள் கிடைத்து விடுகிறது. தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க செய்கிறது. தயிர் சாப்பிடுவதால் வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். பாலில் இருந்து தயாரிக்கப்படும பொருட்களில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளதால் எலும்பு மற்றும் பற்கள் வலுவடைகின்றன.

கவனத்தில் கொள்ள வேண்டியவை:

1.தயிரில் சில மருத்துவ குணங்களும் இருக்கிறது. ஆனால் தயிரை இரவில் சாப்பிடக்கூடாது .

2.சளி மற்றும் இருமல் இருப்பவர்கள் தயிரை இரவில் சாப்பிடக்கூடாது. மேலும் இதனை ஆயுர்வேத மருத்துவமும் கூறுகின்றது.

3.தயிரை இரவில் தனியாக அப்படியே சாப்பிடுவதால் சளியின் வளர்ச்சி இன்னும் அதிகமாக இருக்கும்.

4.இரவில் தயிர் சாப்பிடுவதை தவிர்க்கவும். தயிர் சேர்க்க வேண்டிய கட்டாயம் வந்தால் மோர் குடிக்கலாம்.

5.குளிர்காலத்தில் தயிரை தினந்தோறும் சாப்பிட்டால் உடலுக்கு கேடு விளைவிக்கும்.

6.சரியாக உறையாத அல்லது அரைகுறையாக உறைந்த மற்றும் மூன்று நான்கு மணிக்குள் தயிரைப் பருகுவது பெரும் கெடுதலை விளைவிக்கும்.

7. இதை மீறியும் இரவில் தயிரை சாப்பிடுவதால் தோல் நோய்கள், சோகை, தலைசுற்றல், காய்ச்சல், ரத்த பித்தம் போன்ற நோய்கள் உருவாகலாம்.

Categories

Tech |