Categories
உலக செய்திகள்

சீன அராஜகத்துக்கு முடிவு கட்டுவோம் ….! மோடி உட்பட தலைவர்கள் ஆலோசனை ?…!!

 இந்தியா உட்பட நான்கு நாட்டு தலைவர்கள் சந்திக்கும் முதல் மாநாடு ,மார்ச்  மத்தியில் தொலை தொடர்பு  நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தோ பசிபிக் பகுதியில், சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கவும், கடல் வழிகளில் யாரும் ஆதிக்கம் செலுத்துவதை தடுப்பதற்காக இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா,மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகள் ஒருங்கிணைந்து குவாட் என்ற கூட்டனியை கடந்த 2017இல் உருவாக்கினர்.

இதனைத் தொடர்ந்தது கடந்த ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி கூட்டமைப்பின் வெளிவிவகார மந்திரிகள் மட்டத்திலான பாதுகாப்பு பேச்சுவார்த்தை  கொரோனா பெருந்தொற்று காலத்தில், டோக்கியோவில்  நடைபெற்றது.மேலும்  கடந்த  பிப்ரவரியில்,  நான்கு நாடுகள் தரப்பிலான மூன்றாவது பேச்சுவார்த்தை  நடைபெற்றது.

இந்நிலையில் மார்ச் மத்தியில் அடுத்த  கூட்டமைப்பு நடைபெற உள்ளது. இது  நான்கு தலைவர்களும் கலந்துகொள்ளும்  முதல் மாநாடு  ஆகும். இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள்  தொலைதொடர்பு மாநாட்டில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

குவாட்

 

 

இதில் ஜப்பானிய பிரதமர்  யோஷிஹிடே,அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன்  மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கொரோனா  தடுப்பூசிகளை சீரான முறையில் வினியோகிப்பது மற்றும் பருவகால மாற்றங்களை எதிர்கொள்வது  பற்றி ஆலோசனை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2004ஆம் ஆண்டு இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஆகியவற்றுக்கு பின் உருவாக்கப்பட்ட நான்கு நாடுகள் அடக்கிய கூட்டமைப்பானது தற்போது மண்டல பாதுகாப்பு விஷயங்களில் முக்கிய கவனம் செலுத்தி  வருகிறது.

Categories

Tech |