கிருஷ்ணகிரியில் பெரியாரின் சிலைக்கு மர்மநபர்கள் தீ வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
மக்களிடம் இருந்த அறியாமையை நீக்கி அவர்களுக்கு போதுமான அறிவைப் புகட்டி மூடநம்பிக்கையில் இருந்து மக்களை வெளியே கொண்டு வந்து சுய மரியாதையாக உள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்கியவர் பெரியார். இவர் பெண் விடுதலைக்கு எதிராக பாடுபட்டவர் அதிகளவில் பாடுபட்டவர். திராவிட இயக்கத்திற்கு ஒரு ஆணிவேராக விளங்கிய பெரியார் கருணாநிதி, அண்ணா போன்ற முன்னணி தலைவர்களுள் ஒருவர் ஆவார்.
இப்படிப்பட்ட மரியாதைக்குரிய பெரியாரை அவமதிக்கும் விதமாக கிருஷ்ணகிரி சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் தீவைத்து சென்றுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரியாரின் வெண்கல சிலைக்கு தீ வைத்த நபர்களை நபர்களை கைது செய்யக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் எட்டுப்பட்டு வருகின்றனர்.