Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகையில் துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு… போலீஸ் சூப்பிரண்டு தலைமை..!!

நாகையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பாதுகாப்பு பணிக்காக நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மத்திய துணை ராணுவப் படையினர் வருகை தந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா தலைமையில் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். இந்த அணிவகுப்பு நாகை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கி பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ள பகுதிகள் மற்றும் மக்கள் நெருக்கடி அதிகமாக உள்ள பகுதிகளில் ஊர்வலமாக நடைபெற்றது.

இந்த அணிவகுப்பில் 25 ஆயுதப்படையினர், 70 மத்திய துணை ராணுவப் படையினர் உட்பட 200 காவல்துறையினர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் ஏனங்குடி, திட்டச்சேரி, திருப்புகலூர் ஆகிய பகுதிகளிலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய ராணுவ படையினர், காவல்துறை அதிகாரிகள், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை உட்பட 200 பெரும் திருமருகல் பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரராஜ் தலைமையில் கொடி அணிவகுப்பு மேற்கொண்டுள்ளனர்.

Categories

Tech |