பெரம்பலூரில் மண்டல அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் மண்டல அலுவலர்கள் பணிகள் மற்றும் பொறுப்புகள் குறித்து நேற்று மதியம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஸ்ரீ வெங்கடபிரியா தலைமை தாங்கியுள்ளார். இந்த பயிற்சியில் அவர் பேசுகையில், குன்னம் தொகுதியில் 35 மண்டல அலுவலர்களுக்கும், பெரம்பலூர் தொகுதியில் 40 மண்டல அலுவலர்களுக்கும் என்னென்ன பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது, தேர்தல் பணியில் எவ்வாறு ஈடுபட வேண்டும், அவர்களுக்கான பொறுப்புகள் என்னென்ன ஆகியவை குறித்து அறிவுரை கூறியுள்ளார்.
இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படும் விதம் குறித்தும், வாக்குப்பதிவு இயந்திரத்தை எவ்வாறு இயக்குவது என்பது குறித்தும் மண்டல அலுவலர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் கூடுதல் அலுவலரும், மாவட்ட வருவாய் அதிகாரியுமான ராஜேந்திரன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சங்கர், பத்மஜா, மண்டல அலுவலர்கள், தாசில்தார்கள் ஆகிய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.