உத்திரப்பிரதேச மாநிலத்தில் தாயைப் பார்த்து மகன் என் தந்தை யார் எனக்கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு தான் வருகிறார்கள். தினம்தோறும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அதனால் பெண்களுக்கு நாட்டின் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது.
இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உதம்பூரை சேர்ந்த பெண் ஒருவர் தனது 12வயதில் 1994 ஆம் ஆண்டு தன் அக்கா வீட்டில் இருந்த போது, அண்டை வீட்டை சேர்ந்த இரண்டு பேரால் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது கர்ப்பமான சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதை ஒருவருக்கு கொடுத்து விட்டார். அந்தக் குழந்தை பெரியவனாகி தன் தாயை சந்தித்து தன் தந்தை யார் என கேட்டுள்ளார். அதனால் அந்தப் பெண், தந்தை யார் என அறிய தன்னை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் மீதும் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரை போலீஸ் ஏற்க மறுத்ததால், நீதிமன்றம் மூலம் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.