கார் மோதி சரக்கு வேன் தலைகுப்புறக் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடத்தில் இருந்து உயர் தொழில்நுட்ப ஜவுளி பூங்காவிற்கு நிட்டிங் எந்திரத்தை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் பெரும்பாளியை நோக்கித்சென்றுள்ளது. இந்த வேனை பல்லடத்தில் வசித்து வரும் ரவி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இவர் கோவை திருச்சி நெடுஞ்சாலையில் இருந்து ஜவுளி பூங்கா செல்லும் சாலையில் வேனை திருப்பிய போது, எதிர்பாராதவிதமாக பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி சென்சார் ஒரு கார் இவரின் வேன் மீது மோதி விட்டது.
இந்த விபத்தில் காரின் முன்பக்கம் சேதம் அடைந்த நிலையில், அந்த சரக்கு வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விட்டது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் காயமடைந்த ரவியை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து பல்லடம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.