பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் தனது 10ஆம் ஆண்டு திருமண நாளை தாஜ்மஹாலில் கொண்டாடியுள்ளார் .
பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த வருடம் வெளியான அலவைகுண்டபுரமுலோ படம் சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது . இதைத்தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் புஷ்பா திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது . இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் தனது 10 வது ஆண்டு திருமண நாளை தாஜ்மஹாலில் கொண்டாடியுள்ளார் .
I would like to thank @agrapolice
@ASIGoI @CISFHQrs for their hospitality . Thank you for making my day more special with your arrangements. What a wonderful experience today at @TajMahal . Truly India’s Pride 🇮🇳 pic.twitter.com/YPNXm2eCR5— Allu Arjun (@alluarjun) March 6, 2021
நடிகர் அல்லு அர்ஜுன் கடந்த 2011ஆம் ஆண்டு சினேகா ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 10-வது ஆண்டு திருமண நாளை தனது மனைவியுடன் தாஜ்மஹாலில் கொண்டாடிய புகைப்படங்களை நடிகர் அல்லு அர்ஜுன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .