Categories
தேசிய செய்திகள்

“கடமை தவறாத காவலர்” கைக்குழந்தையோடு காவல் பணி…. குவியும் பாராட்டு…!!

காவலர்களில் ஒரு சிலர் கடமை தவறாது செயல்பட்டு தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். அப்படி ஒரு சில காவலர்களின் அந்த கடமை தவறாத பணி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறது. காவலர்கள் நம்முடைய நாட்டின் கண்களாக போற்றப்படுகின்றனர். காவலர்கள் இல்லை என்றால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடும். இந்நிலையில் கடமை தவறாத காவலர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக சண்டிகரில் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

சண்டிகர் நகரில் பிரியங்கா என்ற பெண் காவலர் ஒருவர் தனது கைக்குழந்தையோடு சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இவரின் கடமை உணர்ச்சியை நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |