Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நவீன வசதியுடன் நிழற்குடை…. சிலருக்கு மட்டும் தான் பயன்படும்…. சமூக ஆர்வலர்களின் கருத்து…!!

நவீன முறையில் இருக்கை வசதியுடன் கூடிய நிழற்குடை அவிநாசி பழைய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி காவல் நிலையம் அருகில் பழைய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தின் எதிர்ப்புறத்திலும், அருகிலும் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அரசு பள்ளிகள், நெடுஞ்சாலை துறை அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், தபால் நிலையம், பி.எஸ்.என்.எல் அலுவலகம், நான்கு ரத வீதிகளிலும் 10 திருமண மண்டபங்கள் போன்றவை உட்பட பல வணிக வளாகங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் தங்களது தினசரி பணிகளுக்காக பொதுமக்கள் இந்த அவிநாசி பழைய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

இவ்வாறு வரும் பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருக்கும் போது அதிக வெயிலின் தாக்கத்தாலும், அப்பகுதியில் நிழற்குடை இல்லாததாலும் மிகவும் அவதிப்பட்டுள்ளனர். இதனால் நிழல் குடை ஒன்றை பழைய பேருந்து நிலையம் பகுதியில் அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்ததால் அவிநாசியில் உள்ள நகைக்கடை நிறுவனத்தினர் அவிநாசி பழைய பேருந்து நிலையத்தில் இருக்கை வசதியுடன் கூடிய நவீன நிழற்குடையை அமைத்துள்ளனர். இந்த நவீன நிழற்குடையானது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தாலும், ஏராளமான பயணிகள் காத்து நிற்கும் அந்த இடத்தில் ஆறு இருக்கைகளுடன் மட்டுமே நிழற்குடை  அமைக்கப்பட்டுள்ளதால் சில பயணிகள் மட்டுமே இதனால் பயனடைவதாக சமூக ஆர்வலர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |