27 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாய்க்கு நேர்ந்த கொடுமை அறிந்த மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த 12 வயது சிறுமியை 27 ஆண்டுகளுக்கு முன்னர் குமார் மற்றும் அவரது சகோதரர் இருவரும் சேர்ந்து பலமுறை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் கர்ப்பமடைந்த அந்த சிறுமி 1994 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பெற்றுள்ளார். இந்நிலையில் அந்த குழந்தையை அவர் தொடர்ந்து வளர்க்க முடியாது என்பதால் அதே பகுதியை சேர்ந்த வேறு நபரிடம் ஒப்படைத்துவிட்டு அந்தப் பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணை திருமணம் செய்த நபர் பத்து ஆண்டுகள் கழித்து அவரை விவாகரத்து செய்துள்ளார்.
இதனையடுத்து அப்பெண்ணின் மகன் வளர்ந்து தனது உண்மையான பெற்றோரை கண்டுபிடிக்க முயன்று உள்ளார். அப்போது தனது தாயை கண்டுபிடித்த நிலையில் தந்தை யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக காவல்துறையின் உதவியை நாடியுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து டி.என்.ஏ பரிசோதனை தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.