விடுதி அறையில் கூலித்தொழிலாளி இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாலாவயல் பகுதியில் ஆலப்பன் என்ற கூலித் தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெத்துரெட்டிபட்டியில் அறை எடுத்து தங்கி அங்குள்ள அட்டை கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனது அறையில் ஆலப்பன் மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சாத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் அவரது மனைவி தனது கணவர் இறப்பில் மர்மம் இருப்பதாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.