விதிகளை மீறி செயல்பட்ட 11 பட்டாசு ஆலைகளுக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 4 பட்டாசு ஆலைகளில் அடுத்தடுத்து வெடிவிபத்து ஏற்பட்டதால் பல பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை துணை முதன்மை அதிகாரி சுந்தரேசன் கூறும்போது, திருப்பூர் மாவட்டத்தில் 800க்கும் மேற்பட்ட வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள் இயங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் தலைமையில் இந்த ஆலைகளை ஆய்வு செய்வதற்காக இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் சோதனை செய்ததில் மரத்தடியில் பட்டாசு தயார் செய்து அளவுக்கு அதிகமாக அதில் மருந்து இருப்பு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனால் அளவுக்கு அதிகமாக பணியாளர்களை கொண்டு விதியை மீறி செயல்பட்ட 11 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.