பூட்டிய வீட்டிற்குள் மூதாட்டி சடலமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக் குறிச்சி பகுதியில் மணிமுத்து என்பவரின் மனைவியான சிவனம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மூதாட்டியின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருந்துள்ளது. இதனால் அந்த மூதாட்டியை அடிக்கடி உறவினர்கள் சென்று பார்த்து வந்துள்ளனர்.
இதனை அடுத்து சாத்தான்குளம் பகுதியில் வசித்து வரும் அவரது அக்கா மகள் சிவனம்மாளை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சிவனம்மாள் படுக்கையில் உயிரற்று கிடந்ததை பார்த்து அதிரிச்சி அடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.