கல்லூரி மாணவருடன் சேர்ந்து சிவகார்த்திகேயன் பாடிய பாடல் இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் குழந்தைகள், பெரியவர்கள், இளைஞர்கள் என அனைவரின் மனதிலும் தனக்கென ஒரு இடம் பிடித்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது அயலான் மற்றும் டாக்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் அனிருத் இசை அமைப்பில் உருவாக உள்ள ‘டான்” திரைப் படத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார். இந்நிலையில் டான் படத்தின் படபிடிப்பு கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளது. அப்போது அக்கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.
விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் அந்த கல்லூரி மாணவர் ஒருவருடன் இணைந்து எதிர்நீச்சல் படத்தில் வரும் “பூமி என்னை சுத்துதே” பாடலை பாடியுள்ளார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
https://www.instagram.com/p/CMBrmhuDIAF/?utm_source=ig_web_copy_link