வாழப்பாடியில் மனைவியை பெற்றோர் வீட்டிலிருந்து பணம்,நகையை வாங்கி வருமாறு துன்புறுத்திய கணவன் மற்றும் அவரின் குடும்பத்தினரின் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
சேலம் மாவட்டத்தில், வாழப்பாடி பகுதியை சேர்ந்த 24 வயதுடைய சூர்யவர்மா ,சென்னையில் மாநகர காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆண்டு வாழப்பாடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தேர்வு எழுத வந்த,கடலூரை சேர்ந்த 24 வயதுடைய சற்குணா என்ற இளம் பெண்ணும், சூர்யவர்மாவும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 5 மாதத்திற்கு முன் திருமணம் செய்துகொண்டார்கள். கணவன் சூர்யவர்மா ஒரு மாத காலமாக மனைவி சற்குணாவை பெற்றோர் வீட்டிலிருந்து பணம், நகை வாங்கி வருமாறு துன்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில் பிப்ரவரி 16ம் தேதி அன்று ,இவர் மனைவியை தகாத வார்த்தையால் திட்டி, அடித்து விரட்டி வீட்டைவிட்டு விரட்டினார். இதற்கு சூர்யவர்மாவின் பெற்றோரும் , சகோதரரும் உடன் இருந்துள்ளன. இதன் காரணமாக மனைவி சற்குணா வாழப்பாடி போலீஸாரிடம் கணவன் சூர்யவர்மா, மாமனார் சரவணன் (வயது 47) மாமியார் கீதாலட்சுமி (வயது 45)மற்றும் கணவனின் சகோதரன் சேதுபதி( வயது 21)ஆகியோரின் மீது புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.