நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த விஞ்ஞானிகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீயீல்டு என்ற இரண்டு தடுப்பு மருந்துகளுக்கு அவசர ஒப்புதல் அளிக்கப்பட்டு முன்களபணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக அரசியல் தலைவர்களும் தடுப்பூசி போட்டுகொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவின் பல மாநிலங்களை போல குஜராத்திலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதையடுத்து அங்கு சுகாதார அதிகாரி ஒருவர் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி போட்ட பிறகும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவருக்கு லேசான அறிகுறிகள் இருப்பதால் வீட்டிலேயே தனிமை படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.