நடைப்பயிற்சி செய்வதால் உடல் எடை குறையாது என்று ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
காலை எழுந்ததுமே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தவிர மற்றவர்களும் உடற்பயிற்சியும், நடைப் பயிற்சியையும் செய்து வருகின்றனர். பெரும்பாலும் உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காகவே காலை மாலை என்று இரண்டு வேளைகளில் நடை பயிற்சி மேற்கொள்கின்றனர். இப்படி நடைப்பயிற்சி மேற்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் இது உடல் எடையை குறைக்குமா? என்பது குறித்து அமெரிக்காவின் பிரிஹாம் யங் பல்கலைக்கழகம் ஆய்வு செய்துள்ளது.
இந்த ஆய்வின் முடிவில் உடற்பயிற்சி செய்வதால் உடல் எடை குறையவில்லை என்று கண்டுபிடித்துள்ளது. இது நடைபயிற்சி செய்பவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தினசரி நடைப்பயிற்சி செய்வது உடலை சுறுசுறுப்புடன் வைக்க உதவுமே தவிர உடல் எடை குறையாது என்று அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக கூடுதல் ஆய்வு நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.