நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த விஞ்ஞானிகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீயீல்டு என்ற இரண்டு தடுப்பு மருந்துகளுக்கு அவசர ஒப்புதல் அளிக்கப்பட்டு முன்களபணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக அரசியல் தலைவர்களும் தடுப்பூசி போட்டுகொண்டு வருகின்றனர். மேலும் மது பழக்கம் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போடக்கூடாது என்று கூறப்பட்டது.
இந்நிலையில் மது அருந்துபவர்களுக்கு கொரோன தடுப்பூசி போடுவதால் அதிக பக்க விளைவுகள் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்றும், மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தினசரி மூன்று வேளை மது அருந்துதல் அல்லது அதிக மது அருந்தினால் மருந்தின் வீரியம் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.