Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்…. தொகுதிவாரியாக மாவட்ட ஆட்சியர் பிரிப்பு..!!

தென்காசி மாவட்டத்தில், ஆட்சியர் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை தொகுதி வாரியாக பிரித்து வைத்தார் .

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ம்  தேதியன்று நடப்பதையொட்டி ,தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளான தென்காசி , கடையநல்லூர், ஆலங்குளம், வாசுதேவநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் ஆகிய தொகுதிகளில்  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணியானது நேற்று நடைபெற்றது.

தென்காசி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆட்சியர் சமீரன் ,இயந்திரங்களை கணினியில் ரேண்டமாக பிரித்து, ஐந்து தொகுதிகளுக்கும் இயந்திரங்களை ஒதுக்கி வைத்தார். இதன்பின் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த இயந்திரங்கள் ஐந்து தொகுதிகளில் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.  இதில் மாவட்ட வருவாய் அலுவலரான  ஜனனி சவுந்தர்யா, மாவட்ட ஆட்சியரின்  நேர்முக உதவியாளர்  சேக் அப்துல்காதர், தேர்தல் தாசில்தாரான  சண்முகம் ஆகியோர்  கலந்து கொண்டன.

Categories

Tech |