Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பாரதிய ஜனதா கட்சியினர் இருசக்கர வாகன பேரணி… எஸ்.புதூர் ஒன்றிய தலைவர் தலைமை..!!

சிவகங்கை எஸ்.புதூரில் பாரதிய ஜனதா கட்சியினர் இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றுள்ளது. இந்த பேரணிக்கு திருப்பத்தூர் மாவட்ட தொகுதி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகுத்துள்ளார். மேலும் எஸ்.புதூர் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தேவேந்திரன் தலைமை தாங்கியுள்ளார்.

இந்தப் பேரணியானது நாகமங்கலத்தில் துவங்கி செட்டிகுறிச்சி, புழுதிபட்டி, கே.புதுப்பட்டி, கிழவயல் வழியாக புதூரில் முடிவடைந்துள்ளது. இந்த பேரணிக்கு மாவட்ட செயலாளர் நாகராஜன், பொதுக்குழு உறுப்பினர் சின்னையா, உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |