Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளியில் திடீரென கண்கலங்கிய கனி… எதற்காக தெரியுமா?…!!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளரான கனி திடீரென கண்கலங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம் . இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் சகிலா, அஸ்வின் ,கனி, பவித்ரா ,பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளார். மேலும் சிவாங்கி ,புகழ், பாலா ,மணிமேகலை உள்ளிட்டோர் கோமாளிகளாக வந்து கலக்குகின்றனர்.

இந்நிலையில் இன்று ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சியின் சிறிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள கனியின் பிறந்தநாளுக்கு அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர் . இதனால் ஆனந்த கண்ணீர் விட்ட கனியை போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் அனைவரும் சேர்ந்து பாட்டு பாடி உற்சாகப்படுத்துகின்றனர்.

Categories

Tech |