பிரிட்டனில் மாயமான இளம்பெண் மற்றும் அவரின் குழந்தை தற்போது உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டனிலுள்ள கிளவுஸிஸ்டர்ஷியர் கவுண்டி என்ற பகுதியில் வசிக்கும் 25 வயது இளம்பெண் பென்னிலின் புர்க் மற்றும் அவரின் 2 வயது குழந்தை ஜெல்லிகா ஆகிய இருவரும் கடந்த மாதம் 1-ஆம் தேதியிலிருந்து மாயமானதாக காவல்துறையினாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் இருவரும் கடந்த மாதம் 17ஆம் தேதி என்று கடைசியாக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் காவல்துறையினர் இருவரையும் தேடி வந்த நிலையில் தற்போது இருவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புர்க்கின் மற்றொரு குழந்தை பாதுகாப்பாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பென்னிலின் மற்றும் ஜெல்லிகா இருவரும் உயிரிழந்தது தொடர்பாக 50 வயது நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
மேலும் உயிரிழந்த இருவரின் சடலங்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து டிடெக்ட்டிவ் சூப்பிரன்டென்ட் கிரம் மெக்கி கூறியுள்ளதாவது, மாயமான இருவரின் விசாரணை தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் தங்களிடம் தெரிவிக்குமாறு அவர் கூறியுள்ளார்.